நானும், என் இயற்கையுயிரும்...
எனது தாயிடம், தற்போது பார்க்கும் வேலையை துறந்து விட்டு இயற்கை விவசாயம் செய்ய போகிறேன் என்றேன்.
அவள், 'அது மிகவும் கடினமானது என்றும், வேண்டாம் என்றும்' வினவினாள். சொன்ன மற்ற உறவுகளும் அப்படித்தான்;
என்னை நீ ஈன்றது, 'ஒரு மரபணு விதை போல' இல்லையே அம்மா என்றேன்;
"உயிரும், மரணமும் இயற்கையாக நிகழ்ந்தால் தான் அது அழகு", நானும் எனது இயற்கை விவசாயத்திற்கு திரும்புகிறேன்...
தயாருமாகிறேன்...
- ஸ்கேட்ஸ்